
ஈரானில் உள்ள தெற்கு பிராந்தியத்தின் பந்தர் அப்பாஸ் நகரில் ராஜேய் துரைமுகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அதாவது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கண்டெய்னரில் ஏவுகணை உந்து சக்தியை உருவாக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் இருந்தது. இந்த ரசாயனம் திடீரென வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் முதல் கட்டமாக 14 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் 750 பேர் வரை படுகாயம் அடைந்திருந்தனர். தற்போது பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.