
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினை காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.