
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் 13ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இதன் காரணமாக தற்போது புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்துள்ளனர். அதன்படி புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி பி.ஆர் காவாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் மே 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். மேலும் தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கண்ணா தான் கவாய் பெயரை பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.