உடல் வளர்ச்சிக்காக ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேட்டில் ஜிம்முக்கு சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

பயிற்சியாளர் பரிந்துரைத்த ஊசிகளை பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்த ராம்கி, 6 மாதங்கள் பயிற்சி எடுத்துள்ளார். ஜிம் பயிற்சியாளர் பரிந்துரைத்த ஊக்க மருந்து ஊசியினை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.