
வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும் என கூறப்படுகிறது. ஆனாலும் தமிழக அரசு உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.