
எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இஸ்லாமிய நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள். சமீபத்தில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் விலகுவதாக அறிவித்தார். இதேபோன்று அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அதாவது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்த பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லை என்பதால் அவர்கள் விலகுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்காக பக்கீர் மைதீன் என்பவர் கட்சியிலிருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இவர் அதிமுகவில் 55 ஆண்டு காலம் வரை உழைத்துள்ளார். மேலும் 55 ஆண்டுகால அதிமுக பணியாற்றிய ஒரு முக்கிய நிர்வாகி விலகிய நிலையில் அவர் தலைமைக்கு எழுதிய கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.