
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர் ரகுமான். இவர் இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளர். ஆஸ்கார் விருது வென்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு தற்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைபிரிவில் ஏ.ஆர் ரகுமான் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் மருத்துவமனை சார்பில் பின்னர் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏ.ஆர் ரகுமானுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டவுடன் மிகவும் பதற்றம் அடைந்துள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்ட ஏ.ஆர் ரகுமானின் உடல் நலம் குறித்து விசாரித்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் ஏ ஆர் ரகுமான் நலமுடன் இருப்பது மகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.