
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இன்று இரவு 12 மணி வரையில் சென்னையில் பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெள்ள அபாய எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது புயல் சென்னைக்கு அருகே 110 km தொலைவில் உள்ளது. இது மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் புதுச்சேரி மற்றும் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு எரி புயல் காரணமாக கடல் போல் கொந்தளித்துக் காணப்படுகிறது. சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையத்திலும் மழைநீர் புகுந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக கூவம் ஆற்றின் இரு கறைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக நெளம்பூர்-மதுரவாயில் இடையே முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை முத்தியால்பேட்டையில் ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி இறந்தவர் வடமாநிலத்தை சேர்ந்த சந்தன் என்பவர் தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சந்தனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.