காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று குஜராத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.