
ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள சிம்தான் கோகர்நாக் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தக் காரில் 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பயணம் செய்தனர். இந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு இந்த விபத்து தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.