கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு தனியார் பேருந்தின் மீது அரசு பேருந்து மோதியது.

இந்த கோர விபத்தில் அரசு பேருந்து ஒரு பள்ளத்தில் பாய்ந்த நிலையில் தனியார் பேருந்தில் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கியது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.