நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் என்ற பகுதியில் இன்று நடந்த ஒரு கோர விபத்தில் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் இன்று காலை மலையப்பன், நிர்மலா மற்றும் செல்லம்மாள் ஆகியோர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு ஆம்னி வேன் ஒன்று வேகமாக வந்தது. இது நடை பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது திடீரென பயங்கரமாக மோதியது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.