
தமிழகத்தில் இன்று ஓணம் பண்டிகை திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிப்பூ நேற்று 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு கனகாம்பரம் ஒரு கிலோ 1300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனையடுத்து அரளி பூ, கிலோ 80 ரூபாய்க்கும், செண்டுமல்லி கிலோ 70 ரூபாய்க்கும், சாமந்திப்பூ 120 ரூபாய்க்கும், சம்பங்கி பூ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்று பூக்கள் விலை அதிகரித்துள்ளது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.