குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த ஒன்றை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 17 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு அதிகாலை ஐந்து மணி அளவில் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.