கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகவுள்ளது. குமரிமுனை, விவேகானந்தபுரம், குண்டல், கொட்டாரம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நில அதிர்வின் ரிக்டர் அளவு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.