
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 100 கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் இந்த பயங்கர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 170 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.