
வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலா 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஜின்னா பாலம் அருகே வாரச்சந்தை மைதானத்தில் இன்று காலை ஐயப்பன் என்பவர் நாளை நடைபெறக்கூடிய தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொது மக்களுக்குஇலவச வேட்டி சேலை வழங்குவதற்காக டோக்கனை விநியோகித்து வந்தார்.. அதனை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 60 வயது மதிக்கத்தக்க வள்ளியம்மாள், 62 வயதுள்ள ராஜாத்தி, 60 வயது மதிக்கத்தக்க நாகம்மாள், 70 வயது மதிக்கத்தக்க மல்லிகா ஆகிய 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.. சம்பவ இடத்திலேயே இவர்கள் காயமுற்று உயிரிழந்துள்ளனர்..
அது மட்டும் இல்லாமல் 3 பெண்கள் காயமுற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமான ஐயப்பன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிப்பதோடு கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய 3 பெண்களுக்கு தலா 50,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்..
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/F6t8E5cinw
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 4, 2023