கேரளாவில் சமீப காலமாக மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் வயநாடு பகுதியில் பயங்கர கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சூரல்மலா, முண்டக்காய் டவுண், மேப்பாபடி ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். மேலும் தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.