திமுக கட்சியின் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் குழு நிகழ்ச்சியின் பற்றி விலை மாது என்று பெண்கள் பற்றியும் சைவம் மற்றும் வைணவம் பற்றியும் மிகவும் கொச்சையாக பேசினார். இவருடைய பேச்சு சர்ச்சையாக மாறிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் திமுக கட்சியின் எம்பி கனிமொழி கூட கண்டனம் தெரிவித்தார்.

ஏற்கனவே இவர் மகளிர் பேருந்து குறித்து பேசியதே பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் இவர் தற்போது பெண்கள் பற்றியும் மத நம்பிக்கை குறித்தும் கொச்சையாக பேசியது கண்டனத்திற்கு உள்ளான நிலையில் தற்போது திமுக அவரின் பதவியை பறித்துள்ளது. அதன்படி திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.