கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் நீலேஸ்வரர் அஞ்சு தம்பலம் வீரர்கேகவு கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில் நேற்று நள்ளிரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 154 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதாவது கோவில் திருவிழாவுக்காக பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் திருவிழாவை வெடிக்க பார்த்துக் கொண்டிருந்த பலர் மாட்டிக்கொண்ட நிலையில் 154 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர்   கவலைக்கிடமானதாக உள்ளனர். மேலும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.