சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் தரிசனத்திற்காக வந்த இடத்தில் மரணம் அடையும் பக்தர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் காப்பீடு திட்டத்தை கேரளா அரசு அறிவித்தது. இந்த தொகை தேவசம் போர்டில் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.