
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே திறக்கப்படும் நிலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக செல்வார்கள். குறிப்பாக சபரிமலைக்கு மாலை அணிந்து பாதயாத்திரை ஆக மலை மீது ஏறி பக்தர்கள் செல்வார்கள்.
இந்நிலையில் தற்போது சபரிமலை தேவசம் போர்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கோவிலுக்கு வரும் இடத்தில் பக்தர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு 5 லட்சம் வரையில் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடல்நல குறைவு அல்லது வேறு ஏதாவது காரணங்களால் மரணமடையும்போது அவர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.