
சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ் ,ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவும் எழுத்துப்பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
“இசை வேளாளர்” என சாதி சான்றிதழ் வழங்கும் போது “இசை வெள்ளாளர்” என தவறாக குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படுவதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சாதி சான்றிதழில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் வேறு வேறாக இருக்க கூடாது. மேலும் எழுத்துப் பிழைகள் இல்லாமலும் பெயர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.