
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கிணத்துக்கடவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த மரம் திடீரென முறிந்து இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்தது.
இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்த இரு புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன் பிறகு ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.