
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடியிடம் தற்போது அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதாவது கனிம வள முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் அது தொடர்பான வழக்கு விசாரணைக்காக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தற்போது அமைச்சர் பொன் முடி விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது சட்டவிரோத சுரங்கங்கள் மூலம் அரசாங்கத்திற்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறி அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. மேலும் இந்த வழக்கில் தான் தற்போது அவரிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.