சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறும் கருத்தரகை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் ஒரு அதிரடியான அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழி வகையை கண்டுபிடித்தால் அந்த அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் இந்திய துணை கண்டத்தில் தமிழை தவிர்த்து விட்டு எழுத முடியாது என்று கூறிய நிலையில் சிந்துவெளி எழுத்தை தெளிவாக கண்டறியும் முறையை கண்டுபிடிக்க வேண்டும் என்றார். மேலும் இதனை கண்டுபிடிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் 8.5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.