டெல்லி உச்ச நீதிமன்றம் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறை விதிகளையும் 3 மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதாவது தண்டனை குறைப்பு, சிறைகளை சுத்தம் செய்தல், சமையல் செய்வது போன்ற பணிகளில் ஜாதிய பாகுபாடு காட்டக்கூடாது.

அதன் பிறகு எஸ்சி மற்றும் எஸ்டி விளிம்பு நிலை மக்களை சிறைகளில் ஜாதிய பாகுபாடுடன் நடத்தக்கூடாது. ஒருவேளை சிறையில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறினால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். மேலும் சிறையில் விதிகளை அனைத்து மாநில அரசுகளும் 3 மாதங்களுக்குள் மாற்றி அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.