சென்னை உயர்நீதிமன்றம் சீமானின் பேச்சுகளுக்கு வழக்கு தொடர்வதாக இருந்தால் 100 வழக்குகளுக்கு மேல் தொடர வேண்டும் என்று தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாசமாக பேசியதாக கூறி சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் மேல் மறையீடு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது அவர் சீமான் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால் 100 வழக்குகளை தொடர வேண்டும் என்ற நீதிபதி காட்டமாக விமர்சித்தார். மேலும் சீமான் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நிலையில் அவர் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளது. குறிப்பாக பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்காக அவர் மீது 70-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதியப்பட்டது. இதேபோன்று நடிகை ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கிலும் அவர் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக அவர் மீது தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் அவர் மீது 100 வழக்குகளாவது தொடர்ந்திருக்க வேண்டும் என்று காட்டமாக கருத்து தெரிவித்தது.