
சென்னையில் விடிய விடிய கன மழை பெய்து வரும் நிலையில் முன்னதாக விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தற்போது பள்ளிகளுக்கு மட்டும் இன்று சென்னையில் விடுமுறை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
முன்னதாக இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் கனமழை நீடிக்கும் என்று தெரிவித்ததால் பள்ளிகளுக்கு மட்டும் இது ஒரு நாள் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.