சென்னையில் தொடர்ந்து 5 நாட்களாக 40.5°C மேல் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், ஜூன் 2ஆவது வாரம் வரை வெப்பம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பதிவாகும் வெப்பத்தை விட, உணரும் வெப்பம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வெப்பம் குறைந்தாலும், சென்னையில் குறையாது என்று கூறப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.