சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்ற வழக்கு பதிவாகியுள்ள நிலையில் ஏராளமான வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளும் பதிவாகியுள்ளது.

இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்ட நிலையில் அவரிடம் இன்று சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின்படி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.