சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் இருந்த நிலையில் தற்போது இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி ஜெ. ராதாகிருஷ்ணன் தற்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மாநகராட்சி ஆணையரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.