ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் சமீபகாலமாக ரயில் விபத்துகள் நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இன்று காலை மும்பை- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக 10 பெட்டிகள் வரை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 6 பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த ரயில் விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.