
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில் பெற்ற 8.74 லட்சம் மனுக்கள் மீது ஒரே மாதத்தில் தீர்வு காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 12525 கிராமங்களில் 2500 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.