
மதுரை மேலூரில் உள்ள அரிராப்பட்டி பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைவதாக இருந்தது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு சுரங்கம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் மதுரையில் சுரங்கம் ரத்து செய்யப்பட்டது சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு போராட்டக் குழு சார்பில் நாளை மதுரையில் உள்ள அரிடாப்பட்டி பகுதியில் பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.
இதற்காக இன்று போராட்ட குழு சார்பில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பாராட்டு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்க இருக்கிறார்கள். அதன்படி நாளை குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அதை தொடர்ந்து மதுரை செல்கிறார். மேலும் அங்கு அவர் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.