இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் கான்பூர் மைதானத்தில் நடைபெறும் நிலையில் மழையின் காரணமாக போட்டி தொடர்ந்து ரத்தானது. இந்நிலையில் இன்று கான்பூர் மைதானத்தில் வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி  போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இந்தியா வெற்றி பெற 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ரோஹித் சர்மா 8 ரன்களில் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், கில் 6 கண்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் ஜெய் ஸ்வால் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினார். இதன் காரணமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டிரஸ்ட் தொடரை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தற்போது இந்திய அணி கைப்பற்றியது.