
நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தற்போது தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2080 வரை குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.54,480 ஆக இருந்த நிலையில் ஒரு கிராம் ரூ.6,810 ஆக இருந்தது. மேலும் இதேபோன்று 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 7280 ரூபாயாகவும் ஒரு சவரன் 58,240 ரூபாயாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.