
தமிழகத்தில் தற்போது 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அக்டோபர் 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 15ஆம் தேதி சென்னை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.