தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. ‌ மேலும் இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மற்றும் குந்தா ஆகிய இரு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.