
தமிழக சட்டசபை கூட்டத்துறையின் போது இன்று முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி
தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம்.
இந்தியாவில் 11.2% வருமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வருமைன்கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை.
சிறந்த 100 பல்கலைக்கழகத்தில் 25 தமிழகத்தில் தான் உள்ளது.
இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு.
தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் இதை கூறி உள்ளது.
இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது என்றார்.
அதன் பிறகு காவலர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதாவது இனி செப்டம்பர் மாதம் 6-ம் தேதி இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் காலனி என்ற சொல் ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமையின் குறியீடாகவும் மாறிவிட்டதால் இனி அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் இருந்து அதை நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதோடு இந்த வார்த்தை பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.