ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை பகுதியில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதாவது இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பேருந்தின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பேருந்தில் பயணிகள் இருந்த நிலையில் விபத்தில் சிக்கி 25 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு ஆம்புலன்ஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.