
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நாளையும் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மட்டுமின்றி மேற்கண்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புதுச்சேரியிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது நாளை சேலம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டஙளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார். அதாவது கனமழை எதிரொலி காரணமாக நாளை சேலம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் மிக அதிக கன மழை பெய்யக்கூடும் என்பதால் சில மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.