
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டிசம்பர் மாதமும் அதிகளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அதிகமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சென்னை உட்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.