
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு தமிழ்நாட்டிற்கு 5 நாட்களுக்கு கனமழைக்காண மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று நாளை சேலம் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் அக்டோபர் 3ஆம் தேதி தமிழகத்தில் 18 மாவட்டங்களிலும், அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 16 மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.