
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வந்த லியோ லட்சுமி என்ற எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுமி நேற்று செப்டிக் டேங் தொட்டிக்குள் விழுது உயிரிழந்தார். ஆனால் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். அதாவது மாணவி காலை நேரத்தில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்பறையில் இருந்து சென்ற நிலையில் மாலை வரை தேடாமல் இருந்தது ஏன் என்று கூறியுள்ளனர். அதே சமயத்தில் செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்ததாக சிறுமி கூறப்படும் நிலையில் சிறுமியின் உடை ஈரமாகாமல் இருந்துள்ளது.
செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்தால் சிறுமியின் உடை ஈரமாகால் இருந்திருக்க வேண்டும். ஆனால் சிசிடிவி கேமராவில் குழந்தையை தூக்கி செல்லும்போது அப்படி எதுவும் இல்லை. அதே சமயத்தில் செப்டிக் டேங்க் தொட்டியை சுற்றி இரும்பு வேலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் சிறிய குழந்தை அந்த வேலையை எப்படி அகற்றிவிட்டு உள்ளே செல்ல முடியும். இப்படி சிறுமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், போலீசார் சந்தேகமரணம் என்று பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பள்ளியின் அலட்சியம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது பள்ளியின் தாளாளர், முதல்வர், வகுப்பாசிரியர் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.