
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளங்குடிப்பட்டி பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த கார் சந்தேகப்படும்படியாக நின்ற நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் காருக்குள் 5 பேர் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.
அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி, அவர்களுடைய மகன் மற்றும் மகள், மாமியார் உட்பட 5 பேர் காரில் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளனர். அவர்கள் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளனர். மேலும் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.