தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெறும் நிலையில் ஏற்கனவே அட்டவணை வெளியானது. இந்நிலையில் தற்போது செய்முறை தேர்வுக்கான அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை  வெளியிட்டுள்ளது.

அதன்படி 11ஆம் வகுப்புக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 12-ம் வகுப்புக்கு பிப்ரவரி 7-ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் வலியுறுத்தியுள்ளது.