தமிழக முழுவதும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போதே  தேர்தல் பார்வையாளர்களை   நியமித்து திமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட  பணிகள் நடைபெற உள்ளது.

மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பணிகளை இப்போதே திமுக அரசு முடுக்கி விட்டுள்ள  நிலையில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை  நியமித்து முதல் கட்ட அதிரடி பணிகளை தொடங்கியுள்ளது. மேலும் சரியான முறையில் செயல்படுதா  நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.