ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியில் பாஜக மாநில நிர்வாகி பி பி ஜி சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாஜக எஸ்சி அண்ட் எஸ்டி பிரிவு மாநில பொருளாளரும் வளர்புறம் ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளவர்தான் பி பி ஜி சங்கர். இவர் நள்ளிரவு வீடு திரும்பிய போது நசரத்பேட்டை சிக்னல் அருகே கார் மீது வெடிகுண்டு வீசியும் அறிவாளால் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.