தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் நிலையில் நாளை புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி கட்சியில் குறைந்தபட்சம் 10 வருடங்கள் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தலைவருக்கான பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பாஜகவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

நாளை காலை விருப்பமுள்ளவர்கள் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் அண்ணாமலை தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று தற்போது அறிவித்துள்ளார். இவர் நாளை தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்யப்போவது கிடையாது என்று அறிவித்துள்ளார். மேலும் நாளை விருப்பமான தாக்கல் செய்யும் நிலையில் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.